இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இலலாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலுயா ஆனந்தமே
1.
செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன் – அல்லேலுயா
2.
பாவம் சாவ்ய் இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை – அல்லேலுயா
3.
இயேசுகிறிஸ்துவ் பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன் – அல்லேலுயா
4.
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன் – அல்லேலுயா
5.
கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவோ – அல்லேலுயா
6.
புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன் – அல்லேலுயா
7.
பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை – அல்லேலுயா
8.
தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன் – அல்லேலுயா